தமிழகத்தில் நண்பகலுக்குள் 19 மாவட்டங்களில் சதமடித்த வெயில்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் காலை முதலே 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் தற்போது கோடை வெப்பம் கொளுத்தி வருவதால் வெளியில் செல்ல முடியாமல் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் தினந்தோறும் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி மக்களை வாட்டி வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதலே தமிழகத்தின் வெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 111 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியதாக கூறியுள்ளது. இதில் ஈரோடில் 110 டிகிரியும், கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், ராணிப்பேட்டை, சேலம் ஆகிய மாவட்டங்களில் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, திருப்பத்தூரில் தலா 108 டிகிரியும், வேலூர், விருத்தாச்சலம் ஆகிய மாவட்டங்களில் 107 டிகிரியும், திருச்சி, திருவள்ளூர், திருவண்ணாமலையில் தலா 106 டிகிரி வெப்பம் பதிவானதாக தெரிவித்துள்ளது. இதில் குறைந்தபட்சமாக சென்னை மற்றும் கோவையில் 102 டிகிரி பதிவானதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

Night
Day