தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வங்கக்கடல் பகுதியில் நேற்றைய தினத்திற்குள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழக கடற்கரையை அடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதேபோல் கேரளா மாநிலத்தில் 18 மற்றும் 19ஆம் தேதி களில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது.

Night
Day