தமிழகத்தில் புதிதாக 4 மாநகராட்சிகளை உருவாக்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை, புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக 4 மாநகராட்சிகளை உருவாக்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சியும், திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலை பகுதிகளை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சியும் உருவாக்கப்பட்டுள்ளது. நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சியும், காரைக்குடி நகராட்சி மற்றும் 2 பேரூராட்சிகள், 5 ஊராட்சிகளை ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சியும் உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 4 மாநகராட்சியின் மூலம் தமிழகத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது. 

Night
Day