தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரிப்பு - புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்த ஆட்சியில் 3 முறை முதலமைச்சர் வெளிநாடு பயணம்  செய்துள்ளார். வெளிநாடு பயணம் செல்வது தவறில்லை. ஆனால், வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். தொழில் துறை அமைச்சர் 10 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளோம், 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தியுள்ளோம் என்று சட்டசபையில் சொல்கிறார். 

ஆனால் புது நிறுவனங்கள் எதுமே வரவில்லை. வெளியில் இருந்து தொழில்நிறுவனங்களை கொண்டுவந்ததாக சொல்லும் நீங்கள், எதற்காக ஃபோர்ட் நிறுவனத்தை மூடவைத்து வெளியில் அனுப்பினீர்கள். சென்னையில் மட்டும் 14,000 பேர் வேலை இழந்து நிற்கின்றனர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த 66 பேரின் குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்லி வந்தேன். 100 அடி தொலைவில் நீதிமன்றம், 200 அடி தொலைவில் காவல் நிலையம் இருக்கும் இடத்திலேயே, கள்ளச்சாராய விற்பனை நடப்பதாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கூறினார்கள். ஆனால் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கள்ளச்சாராயம், போதைப்பொருள் விற்பனைக்கு திமுகவினரும் உடந்தை என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இதையெல்லாம் அரசாங்கம் வேடிக்கை பார்க்காமல் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

Night
Day