தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது - புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடப்பதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம்சாட்டியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புரட்சித்தலைவி அம்மா கொடுத்த மக்கள் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என உறுதிபட தெரிவித்தார். மக்கள் தன்னுடன் உள்ளதால் வரும் சட்டமன்ற தேர்தலில் தனது பங்கு மிகவும் அதிகமாக இருக்கும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா கூறினார். அஇஅதிமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை என்று போக்குவரத்துறை அமைச்சர் தவறான தகவல்களை பரப்புவதாகவும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம்சாட்டினார்.

Night
Day