தமிழகத்தில் மே 1ஆம் தேதி வரை வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை நீட்டிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 9 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. இந்நிலையில், வடதமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்கள் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடுமென சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும், அடுத்த 5 நாட்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில்  அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வட தமிழக உள்  மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 9 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.

ஈரோட்டில் 107.6 டிகிரி பாரன்ஹீட்டும்,  திருப்பத்தூரில் 106.88 டிகிரி பாரன்ஹீட்டும், சேலத்தில் 106.7 டிகிரி பாரன்ஹீட்டும், கரூர் பரமத்தியில் 105.8 டிகிரி பாரன்ஹீட்டும் வெயில் பதிவாகியுள்ளது.

தர்மபுரியில் 105.8 டிகிரி பாரன்ஹீட்டும்,  திருத்தணியில் 104.72 டிகிரி பாரன்ஹீட்டும், வேலூரில் 104.54 டிகிரி பாரன்ஹீட்டும், திருச்சியில் 104.18 டிகிரி பாரன்ஹீட்டும் மற்றும் நாமக்கல்லில் 104 டிகிரி பாரன்ஹீட்டும் வெயில் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Night
Day