தமிழகத்தில் மொத்தம் 6.36 கோடி வாக்காளர்கள் - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார். மாநிலத்தில் மொத்தம் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்த அவர், அதில் பெண் வாக்காளர்களே அதிகம் என கூறினார்.

தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, 
தமிழகத்தில் தற்போது உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 950 பேர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்களின் எண்ணிக்கை 3 கோடியே 11 லட்சத்து 74 ஆயிரத்து 27 பேர் எனவும், பெண்களின் எண்ணிக்கை 3 கோடியே 24 லட்சத்து 29 ஆயிரத்து 803 பேர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவர் 9 ஆயிரத்து 120 பேரும், வெளிநாட்டினர் 3 ஆயிரத்து 740 பேரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி வாக்காளர் பட்டியலின்படி அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக அறியப்படும் செங்கல்பட்டு மாவட்டத்தின் சோழிங்கநல்லூர் தொகுதியில் 6 லட்சத்து 90 ஆயிரத்து 958 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதியாக அறியப்படும் நாகை மாவட்டத்தின் கீழ்வேளூர் தொகுதியில் 1 லட்சத்து 76 ஆயிரத்து 555 பேர் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

16 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தில் 40 லட்சத்து 15 ஆயிரத்து 878 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 19 லட்சத்து 70 ஆயிரத்து 279 பேரும், பெண் வாக்காளர்கள் 20 லட்சத்து 44 ஆயிரத்து 323 பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் ஆயிரத்து 276 பேரும் உள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 3 லட்சத்து 16 ஆயிரத்து 642 பேரும், மிக குறைவான வாக்காளர்களை கொண்ட துறைமுகம் தொகுதியில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 980 பேரும் உள்ளனர்.

9 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய திருச்சி மாவட்டத்தில் 23 லட்சத்து 47 ஆயிரத்து 852 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டம் முழுவதும் ஆண் வாக்காளர்கள் 11 லட்சத்து 36 ஆயிரத்து 640 பேரும், பெண் வாக்காளர்கள் 12 லட்சத்து 10 ஆயிரத்து 847 பெரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 365 பேரும் உள்ளனர்.

8 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர் மாவட்டத்தில் 24 லட்சத்து 15 ஆயிரத்து 608 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 11 லட்சத்து 82 ஆயிரத்து 905 பேரும், பெண் வாக்காளர்கள் 12 லட்சத்து 32ஆயிரத்து 351 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 352 பேரும் உள்ளனர்.



Night
Day