தமிழகத்தில் ரூ.20 பத்திரங்களை பயன்படுத்தக்கூடாது - பதிவுத்துறை அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் இனிமேல் 20 ரூபாய் பத்திரங்களை பயன்படுத்த கூடாது என பதிவுத்துறை அறிவித்துள்ளது. 20 ரூபாய் பத்திரங்களை நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக 200 ரூபாய் பத்திரங்களை பயன்படுத்துமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது,

வீடு, கடை வாடகை உள்ளிட்ட சாதாரண ஒப்பந்த ஆவணங்கள் குறித்து பதிவுத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நில உரிமையாளருக்கும், குத்தகைதாரருக்கும் இடையே கையொப்பமிடப்பட்ட சட்ட ஒப்பந்தமாக கருதப்படுவது வாடகை ஒப்பந்தம் ஆகும். முதல் கட்டமாக 11 மாதங்களுக்கு கையெழுத்திட்டு அதன் பிறகு நீட்டித்துக் கொள்ள வேண்டுமானால் புதுப்பித்துக் கொள்ளலாம். இதற்கு இடைப்பட்ட காலத்தில் தேவை ஏற்பட்டால் மூன்று மாதங்களுக்கு முன்பாக தகவல் கூற வேண்டும்‌. வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்வதற்கான வழிமுறையும், பொறுப்பும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.

Night
Day