தமிழகத்தில் வடமாநில மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஹோலி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் வடமாநில மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஹோலி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தங்கசாலையில் வட இந்தியர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் வண்ண வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி உற்சாகமாக ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சியில் வடமாநில மக்கள் அதிகம் வசிக்கும் பெரிய கம்மாளத்தெரு, சின்னசெட்டித்தெரு, குஜிலிதெரு, ஜாபர்ஷா தெரு, பொன்னகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நாராயணன் நகர் பகுதியில் வசிக்கும் வடமாநிலத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். அப்போது ஒருவருக்கொருவர் வண்ண, வண்ணப்பொடிகளை பூசிகொண்டு உற்சாக நடனமாடினர். 

varient
Night
Day