தமிழகத்தில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை துவக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்கான வேட்புமனுத்தாக்கல், கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து, கடந்த 7 நாட்களாக அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சைகள் என ஏராளமானோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்நிலையில், 20ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. 

தமிழகத்தில் மட்டும் 1,749 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அதன் மீதான பரிசீலனை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 30ம் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Night
Day