எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் மோசமான ஆட்சி நடைபெறுவதாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.
ஒருநாள் பயணமாக சென்னை வந்த அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சென்னை மிண்ட் பகுதியில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரை பொதுக்கூட்டத்தில் ஜெ.பி.நட்டா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மொழி, கலாச்சாரத்தில் தமிழ்நாடு உயர்ந்த நிலையில் இருப்பதாக குறிப்பிட்டார். தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எந்த வித குறிக்கோளோ, ஜனநாயகத்தின் மீது எந்த மதிப்போ இல்லை என்று சாடினார். உயர்ந்த தமிழகம் சரியான தலைவர் இல்லாத நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். தேசிய அளவில் இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்கு முக்கியமானது என்று சுட்டிக்காட்டிய அவர், பிரதமர் மோடியின் மனதில் தமிழகம் சிறப்பான இடத்தை பெற்று இருப்பதாகவும், பிரதமர் செல்லும் இடங்களில் எல்லாம் தமிழ் மொழியின் சிறப்பை எடுத்த கூறுவதாகவும்
ஜெ.பி. நட்டா குறிப்பிட்டார்.