தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென் தமிழக பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி உட்பட தென் மாவட்டங்களில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம், பாபநாசம், மணிமுத்தாறு போன்ற பகுதிகளில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில், இன்றும், நாளையும் நெல்லை மாவட்டத்திற்கு கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை அடுத்து பொதுமக்கள் மரங்கள், மின்கம்பங்கள், நீர் நிலைகள் அருகில் செல்ல வேண்டாம் எனவும், தகுந்த முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி மக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 24 மணி நேரத்தில் 17 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மன்னார் வளைகுடா ஒட்டிய குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் வரும் 20ம் தேதி வரை தமிழகத்தின் அநேக இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நீலகிரியில் நேற்று இரவு பெய்த கனமழையால் அதிகபட்சமாக குன்னூரில் 17 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கீழ் கோத்தகிரியில் 8 சென்டி மீட்டர் மழையும், எடப்பள்ளியில் 7 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.


Night
Day