எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 874 ஆண் வேட்பாளர்கள், 76 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
முதற்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம், புதுவையில் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம்
நிறைவு பெற்றது. 39 தொகுதிகளிலும் ஆயிரத்து 403 வேட்பாளர்கள் ஆயிரத்து 749 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் ஆயிரத்து 85 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. 135 வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டன. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 874 ஆண் வேட்பாளர்கள், 76 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கரூர் தொகுதியில் அதிகபட்சமாக 54 வேட்பாளர்களும், தென் சென்னையில் 41 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். குறைந்தபட்சமாக நாகையில் 9 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர். சென்னை மத்திய தொகுதி, வேலுர், விழுப்புரம், சேலம் பொள்ளாச்சி, தஞ்சை ஆகிய தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் யாரும் போட்டியிடவில்லை. மேலும் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த வேட்பாளர்கள் யாரும் போட்டியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.