தமிழகத்தை சேர்ந்த 21 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத்தலைவர் விருது அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழகத்தை சேர்ந்த ஜ.ஜி., துரைக்குமார், உள்ளிட்ட 21 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத்தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தை முன்னிட்டு, சிறப்பாக செயல்பட்ட மாநில காவல்துறை அதிகாரிகளுக்கும், மத்திய ஆயுதப்படை வீரர்களுக்கும், ரயில்வே காவல் அதிகாரிகளுக்கும் சிறப்பாக செயல்படும் வீரதீர செயல்களுக்கான விருது, மெச்சத்தக்க சேவைக்கான விருது மற்றும் மிக சிறப்பாக செயல்படும் காவலர்களுக்கான விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.

நாளை குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில்,நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 746 காவலர்களுக்கு விருதுகள் மற்றும் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில், தமிழகத்தை சேர்ந்த 21 காவல்துறை அதிகாரிகளுக்கு மெச்சத்தக்க சேவைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நாளை டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசுத் தின நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவிக்க உள்ளார்.

Night
Day