தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு கனமழை எச்சரிக்கை

எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், இன்று திடீரென வானிலை மாறி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் பல நாட்களுக்குப் பிறகு மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதனிடையே, வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறி, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 22ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day