தமிழகம் முழுவதும் தொடங்கியது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் ப்ளஸ்-2 பொதுத்தேர்வுகள் இன்று துவங்கிய நிலையில், மாணவ-மாணவிகள் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் தேர்வு எழுதி வருகின்றனர்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 1, ப்ளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2024-25 கல்வி ஆண்டுக்கான ப்ளஸ்-2 பொதுத் தேர்வு இன்று தொடங்கி, வரும் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வை 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 பள்ளி மாணவிகள், 18 ஆயிரத்து 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதி வருகின்றனர்.

ப்ளஸ்-2 பொதுத்தேர்வை 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்களில் மாணவர்கள் எழுதி வருகின்றனர். தேர்வை கண்காணிக்க 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்வு முறைகேடுகளை தடுக்க 4 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் கண்காணிப்பு பணியில் 
ஈடுபட்டுள்ளனர்.

மேலும் தேர்வு மைய வளாகத்துக்குள் செல்போன் எடுத்து வருவதற்கும் ஆசிரியர்கள் தேர்வறையில் செல்போன் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் குற்றங்களுக்கு ஏற்றவாறு தண்டனைகள் வழங்கப்படும். ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளி அங்கீகாரத்தினை ரத்து செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Night
Day