எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகம் முழுவதும் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், 8 லட்சத்து 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வை எழுதி வருகின்றனர்.
கடந்த 3ம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கிய நிலையில், இன்று பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள 7 ஆயிரத்து 557 பள்ளிகளை சேர்ந்த 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 மாணவர்களும், 4 லட்சத்து 28 ஆயிரத்து 946 மாணவிகளும் என மொத்தம் 8 லட்சத்து 18 ஆயிரத்து 369 பேர் தேர்வை எழுதி வருகின்றனர்.
தனித்தேர்வர்கள் 4 ஆயிரம் பேரும், சிறைவாசிகள் 137 பேரும் ப்ளஸ் 1 பொதுத் தேர்வை எழுதி வருகின்றனர். தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 316 மையங்களில் தேர்வு நடைபெற உள்ள நிலையில், கண்காணிப்பு பணியில் 4 ஆயிரத்து 470 பறக்கும் படைகளும், தேர்வுப் பணிகளில் 44 ஆயிரத்து 236 தேர்வறை கண்காணிப்பாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.