தமிழகம் முழுவதும் வரும் 23ம் தேதி ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2025 -26ம் ஆண்டு பட்ஜெட் மற்றும் விளம்பர திமுக அரசை கண்டித்து வரும் 23ம் தேதி ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளதாக, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

சென்னை திருவல்லிக்கேணியில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மாயவன், சேகர், பார்த்தசாரதி உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது முதலமைச்சரிடம் தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர். மேலும் தமிழ்நாடு பட்ஜெட் மற்றும் தமிழ்நாடு அரசை கண்டித்து வரும் 23ம் தேதி ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளதாக ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

Night
Day