தமிழகம் வந்த பிரதமரை வரவேற்காமல் முதலமைச்சர் ஸ்டாலின் ஊட்டியில் ஓய்வெடுக்க சென்றுள்ளார் - தமிழிசை சவுந்தரராஜன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் தமிழகத்துக்கு வந்த போது அவரை வரவேற்காமல் முதலமைச்சர் ஸ்டாலின் ஊட்டியில் ஓய்வெடுக்க சென்றதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்த அவர்,  ஒரு நாட்டின் பிரதமர் மாநிலத்திற்கு வரும்பொழுது அம்மாநில முதலமைச்சர் அவரை வரவேற்க வேண்டும் என்பது மரபு, ஆனால் விளம்பர திமுக முதல்வரோ ஊட்டியில் சென்று ஓய்வடுப்பதாக குற்றம் சாட்டினார், மேலும். பிரதமர் மோடி வேஷ்டி சட்டை அணிந்து தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றுகிறார் ஆனால் இங்கு தமிழ், தமிழ் என கூறுவோர் நடத்தும் பள்ளியிலோ, அவர்களின் பெயர்களிலோ தமிழ் இல்லை , திமுகவினர் அனைத்திலும் இரட்டை வேடும் போடுகின்றனர் என விமர்சித்தார்

Night
Day