எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடுவர்கள் தபால் வாக்கு எப்படி செலத்த முடியும், அவர்களுக்கான வழிமுறைகள் என்னென்ன என்பதை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு விளக்கியுள்ளார்.
தேர்தலில் ஈடுபடும் பணியாளர்கள் இன்று மாலை 6 மணி வரை பயிற்சி மையங்களிலோ அல்லது தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகங்களுக்கோ சென்று தபால் வாக்குகளை பதிவு செய்யலாம்
இந்த தபால் வாக்குகள் ஜுன் 3 ம் தேதி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மூலம் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்
வாக்குச்சாவடியில் ஈடுபடும் தேர்தல் குழுவில் தேர்தல் நடத்தும் பணியாளர்கள், காவலர்கள், பெல் நிறுவனத்தின் பொறியாளர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றிருப்பதாவும்,
பத்து வாக்குச்சாவடி மையத்திற்கு ஒரு மண்டல அளவிலான குழு வீதம் மொத்தம் 6 ஆயிரத்து 170 மண்டல குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சிறையில் உள்ள கைதிகள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய விண்ணப்பத்தை அளித்து ஒப்புதல் பெற்ற பிறகே தபால் வாக்கு மூலமாக வாக்களிக்க முடியும்.
மேலும் தமிழகத்தில் உள்ள 44,800 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருவதாகவும், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 65 சதவீத வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா முறையில் கண்காணிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.