தமிழக அரசின் கடன் ரூ. 8.33 லட்சம் கோடி - பொருளாதார நிபுணர்கள் குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாடு அரசின் கடன் 8 லட்சம் கோடி ரூபாயாக இருப்பதாக நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். இதில் அரசின் கடனாக 8 லட்சத்து 33 ஆயிரத்து 361 கோடி இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அரசின் கடன் கடந்த ஆண்டு 7 லட்சத்து 26 ஆயிரத்து 28 கோடி ரூபாயாக இருந்தது. இந்த ஆண்டு 1 லட்சத்து 7 ஆயிரத்து 332 கோடி ரூபாய் கடன் அதிகரித்துள்ளது என்றும், 
வருவாய் பற்றாக்குறை 49 ஆயிரத்து 278 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. முறையான திட்டமிடல் இன்றி திட்டங்களை அறிவிப்பதால் அரசின் கடன் சுமை பலமடங்கு அதிகரித்து வருகிறது.

Night
Day