தமிழக அரசுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதித்ததற்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுமென போக்குவரத்துத்துறை அறிவித்திருந்தது. கடந்த 24ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், கோயம்பேட்டில் இருந்து நசரத்பேட்டை வழியாக சென்ற ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, கண்டனம் தெரிவித்துள்ள ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்கு போதிய இடவசதி செய்து தரவில்லை என்றும், இடவசதி செய்து தராமல் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்கு  அபராதம் விதிப்பது நியாயமல்ல எனவும் தெரிவித்துள்ளனர். 

Night
Day