தமிழக அரசைக் கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

மீட்டர் கட்டண உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இன்று ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை அண்ணாசாலையில் நடைபெற்ற போராட்டத்தில், கடந்த 12 ஆண்டுகளாக உயர்த்தப்படாத ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும், ஆட்டோக்களில் கியூ ஆர் கோட் ஒட்டுவதை நிறுத்த வேண்டும், பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்று விளம்பர திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம், ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கை குறித்து இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்காவிட்டால் 24-ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில், ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்று விளம்பர திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர் பேசிய ஆட்டோ கால்டாக்சி கூட்டமைப்பு சங்க தலைவர் ஜாகிர் உசேன், கோரிக்கைகள் குறித்து பலமுறை போக்குவரத்துதுறை ஆணையர், போக்குவரத்து துறை அமைச்சர் ஆகியோருக்கு மனுக்களை வழங்கியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Night
Day