தமிழக கடன் ரூ.9.5 லட்சம் கோடி- "திமுக அடித்த கமிஷன் எவ்வளவு" - அண்ணாமலை கேள்வி

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பழைய காணொலி ஒன்றை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு தமிழ்நாட்டின் மொத்த கடனான 9.5 லட்சம் கோடி ரூபாயில் நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளது ஊழல் திமுக அரசை ஆட்டம் காண வைத்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, கமிஷன் அடித்தே 5 லட்சம் கோடிக்கு தமிழகத்தை கடனாளி மாநிலமாக ஆக்கியுள்ளார்கள் என கடந்த அரசு மீது குற்றம்சாட்டி தற்போதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மேற்கொண்ட பொய் பிரச்சாரத்தின் காணொலியை அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். அதில் ஊழல் திமுக முதலமைச்சரின் இந்த பொய் பிரச்சார காணொலியை பார்க்கும் வாய்ப்பு கிட்டியதாகவும், அன்று கமிஷன் அடித்தே 5 லட்சம் கோடிக்கு தமிழகத்தை கடனாளி மாநிலமாக ஆக்கியுள்ளார்கள் என கூறும் நீங்கள், இன்று தமிழகத்தின் மொத்த கடனான 9.5 லட்சம் கோடி ரூபாயில் அடித்த கமிஷன் எவ்வளவு என கேள்வி எழுப்பியுள்ளார்.

வரும் 14ஆம் தேதி, நடப்பு நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ளதாகவும்  இந்த ஆண்டு நிறைவு பெறும் போது, தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியிருக்கும் எனவும் அண்ணாமலை தனது பதிவில் தெரிவித்துள்ளார். ஆயிரத்து 488 கோடியே 50 லட்சம் ரூபாய் கடனில் சென்னை மாநகராட்சி தள்ளாடிக்கொண்டிருக்க, மாநகராட்சிக்குச் சொந்தமான கழிவறைகளை பராமரிக்கும் பணிகளை தனியார் நிறுவனத்துக்கு 430 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டதில் ஊழல் திமுக அமைச்சரின் நேரடி தொடர்பு இருப்பதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அண்ணாமலை இந்த கேள்வி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

Night
Day