எழுத்தின் அளவு: அ+ அ- அ
தேசிய கீதத்திற்கு, அவமரியாதை செய்ய வேண்டும் என்பதற்காக ஆளும் கட்சி ஆதரவோடு பேரவை தலைவர் நாடகத்தை நடத்தி இருப்பதாக, பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதம் மறுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பேரவையில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், அரசியல் அமைப்பு சட்டத்தில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்பது மரபு என்றும், அதனையே ஆளுநர் கேட்டுக் கொண்டுதாகவும் குறிப்பிட்டார்.
பேரவை தலைவர் தனது எல்லையை பெரிதாக நினைத்து கொண்டுள்ளதாகவும், மக்கள் பிரச்சனைகளை பேரவையில் பேச அனுமதிப்பதில்லை என்றும் குற்றம்சாட்டிய வானதி சீனிவாசன், பேரவையில் அமைச்சரை போல், பேரவை தலைவர் பேசிக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.
பேரவையில் நடப்பதை கூட வெளியே ஊடகங்களில் காட்டக்கூட கூடாது என கூறுவதுதான் கருத்து சுதந்திரமா என கேள்வி எழுப்பிய வானதி சீனிவாசன், வேண்டும் என்றே தேசிய கீதத்திற்கு, அவமரியாதை செய்ய வேண்டும் என்பதற்காக ஆளும் கட்சி ஆதரவோடு பேரவை தலைவர் நாடகத்தை நடத்தி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.