தமிழக சட்டமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார். 

பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 12-ம் தேதி தொடங்கிய நிலையில், அரசின் உரையை ஆளுநர் படிக்க மறுத்த நிகழ்வும் அடுத்தடுத்த நாட்களில் ஆளுநர் உரை மீது விவாதங்கள் நடைபெற்றது. தொடர்ந்து இன்று பொது பட்ஜெட்டும் நாளை வேளாண் துறை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகின்றன. பட்ஜெட் மீதான விவாதங்கள் வரும் 21-ம் தேதியன்று காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளிலும் நடைபெற உள்ளன. 22-ம் தேதி பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதங்களுக்கு அமைச்சர்கள் நிதிநிலை, வேளாண்மை அறிக்கைகள் ஆகியவற்றின் மீதான பொது விவாதங்களுக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசும், வேளாண் அமைச்சர் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வமும் பதிலளிக்கின்றனர்.

Night
Day