தமிழக பட்ஜெட் அறிக்கை ஏமாற்றத்தை அளிக்கிறது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக அரசின் பட்ஜெட் அறிக்கையில் எதிர்பார்த்த  திட்டங்களுக்கான அறிவிப்புகள் இல்லாதது வருத்தம் அளிப்பதாக பாமக எம்எல்ஏ ஜிகே மணி தெரிவித்துள்ளார்.  பட்ஜெட் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலை கணக்கிட்டு அதற்கான முக்கிய அறிவிப்புகள் மட்டுமே பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளதாக  கூறினார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆவலோடு எதிர்பார்த்த பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவர வேண்டும் என்ற அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை என்றும் அவர் கூறினார். மேலும் சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பான  எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றத்தை அளிப்பதாகவும் பாமக எம்எல்ஏ ஜிகே மணி தெரிவித்தார். 

Night
Day