தமிழக பட்ஜெட் மார்ச் 14 ஆம் தேதி தாக்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக அரசின் 2025- 26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், வரும் மார்ச் 14-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த மாதம் 6-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. ஆனால், அன்றைய கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையை புறக்கணித்து சென்றாலும், சபாநாயகர் தமிழில் வாசித்த உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழக சட்டசபை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 2025-2026-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக மார்ச் மாதம் 14-ந் தேதி சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சபாநாயகர் மு.அப்பாவு வெளியிட்டார். அன்றைய தினம்  நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உளள்ளார்.

Night
Day