தமிழக பட்ஜெட் - தலைமைச் செயலக சங்கம் கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 விளம்பர திமுக அரசின் 2025-26 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சமூகத்தை முழுவதுமாக புறக்கணித்துள்ளதாக தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், தேர்தல் வாக்குறுதியில் அளித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாதது விளம்பர திமுக அரசு சொன்னதை செய்யாது என்பதற்கு சாட்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளது என்றும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சியாளர்களை ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day