தமிழக மக்களிடம் திமுகவின் வேஷம் இனியும் எடுபடாது - அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பேட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி, பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பான விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் உடனடியாக செயல்பட்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் உட்பட, துணைவேந்தர் நியமிக்கப்படாத பல்கலைக்கழகங்களுக்கு உடனடியாக துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தினார். குற்றச் செயல்களில் திமுகவினருக்கு தொடர்பு இருப்பதாகவும், அதனால்தான் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மக்களிடையே கருத்து நிலவுவதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார்.

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், இதுபோன்ற முக்கிய பிரச்சனைகளில் திமுக அரசு விரைந்து செயல்படாமல் விழாக்கள் நடத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டினார். தமிழகத்தில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண உதவிகள் முறைப்படி வழங்கப்படவில்லை என்றும், மக்களின் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படவில்லை என்றும் புரட்சித்தாய் சின்னம்மா புகார் தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழக மாணவி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை தொடர்ந்து புதுக்கோட்டையில் ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பதாகவும், இதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டார். 

கழகத்தில் எந்த ஒரு முடிவையும், தான், தனியே எடுக்க முடியாது என்றும், மக்கள்தான் இறுதி எஜமானர்கள் என்றும் மற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கையில் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார்.

பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் யாருக்கும் சாதகமாகவோ, பாதகமாகவோ செயல்படாமல் மக்கள் பிரச்சனைகளுக்கு மிகுந்த முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், அப்போதுதான் அதற்குப் பொறுப்பானவர்கள் பயப்படுவார்கள் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார்.

தமிழகத்தில் கொலை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியாமல் காவல்துறை திணறுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார். 

தமிழக அரசின் நிதி நிலைமை சரியில்லை என்றும், விரைவில் 10 லட்சம் கோடி ரூபாய் கடனை தமிழக அரசு எட்டிவிடும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார்.


Night
Day