தமிழக மக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் - புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக மக்கள் அனைவருக்கும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தீபாவளி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள தீபாவளி திருநாள் வாழ்து செய்தியில், நாடு முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க, தீபத்திருநாளாம் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் தனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் தமது இதயம் கனிந்த தித்திக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது - இந்நாள் இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து  நன்மைகள் சுடர்விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் மக்களால் கருதப்படுகிறது என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

தீபாவளித் திருநாளில் மக்கள் அதிகாலையில் எழுந்து, எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, தங்கள் இல்லங்களில் தீபங்களை ஏற்றி, வளமான வாழ்விற்கு இறைவனை வழிபட்டு, உற்றார் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி, விருந்துண்டு, உற்சாகத்துடனும், குதூகலத்துடனும் தீபாவளி திருநாளைக் கொண்டாடி மகிழ்கிறார்கள் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

இந்த இனிய திருநாளில், நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும், வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும், அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகட்டும் என்று எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை தமது இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

Night
Day