தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரி விடுபட்டு பாடப்பட்டது மிகவும் துரதிருஷ்டவசமானது என்றும், வருங்காலங்களில் பொது நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வோர் மிகுந்த கவனத்துடன் இருந்து, இதுபோன்ற தவறுகள் மீண்டும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, தமிழக ஆளுநர் முன்னிலையில் தேசிய கீதத்தை தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது என்றும், அச்சமயம் "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரி விடுபட்டு பாடப்பட்டது மிகவும் துரதிருஷ்டவசமானது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற செயல்களால் தமிழக மக்களின் மனது மிகவும் புண்பட்டுவிடும் என்பதை கருத்தில் கொண்டு, வருங்காலங்களில் பொது நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருந்து, இது போன்ற தவறுகள் மீண்டும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.
தமிழக ஆளுநர் மாளிகையின் சார்பாக, இதில் ஆளுநருக்கு எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது - அதேபோன்று தூர்தர்ஷன் நிர்வாகமும், நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு இருக்கிறது - எனவே, இதற்கு மேல் இதில் அரசியல் செய்வதை விட்டுவிட்டு, ஆளும் கட்சியினர் தமிழக மக்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்றும், கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கேட்டுக்கொண்டுள்ளார்.