தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட  21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 

நாட்டின் 18வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதில், தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதுமட்டுமின்றி, ராஜஸ்தானில் 12 தொகுதிகளுக்கும், உத்தரப்பிரதேசத்தில் 8 தொகுதிகளுக்கும், மத்தியப்பிரதேசத்தில் 6 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதேபோல், அசாம், மகாராஷ்டிரா, உத்தராகண்ட் ஆகிய இடங்களில் தலா 5 தொகுதிகளிலும், பிஹாரில் 4 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. அருணாசல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா ஆகிய இடங்களில் தலா 2 தொகுதிகளிலும், சத்தீஸ்கர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, அந்தமான் நிகோபார், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளில் தலா 1 தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாடு முழுவதும் மொத்தம் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு மற்றும் திரிபுரா மாநிலத்தின் ராம்நகர் ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் இன்று நடைபெறுகிறது.

Night
Day