தமிழ்நாடு : தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு இன்று நடைபெற்றது. சென்னையில் தேர்வு மையத்தில் அடிப்படை வசதி இல்லையெனக்கூறி தேர்வர்களின் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது. கடந்த மாதம் 7-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்த தேர்வு மழை பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 130 மையங்களில் நடைபெற்ற தேர்வை, 41 ஆயிரத்து 485 பேர் எழுதினர். அதன்படி சென்னை திருவல்லிக்கேணி என்டிகே அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்ற தேர்வில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என தேர்வு நடத்தும் அதிகாரிகளுடன் தேர்வர்களின் குடும்ப உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட குடும்ப உறுப்பினர்களை போலீசார் அங்கிருந்து வெளியேற்றினர். 

திருவண்ணாமலையில், நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட  4 பள்ளிகளில் ஆயிரத்து 504 தேர்வர்கள், பட்டதாரி ஆசிரியளுக்கான போட்டித் தேர்வை எழுதினர். முன்னதாக திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். 

நெல்லை டவுன் மற்றும் பாளையங்கோட்டை உள்ளிட்ட 8 மையங்களில் 2 ஆயிரத்து 636 பேர் பட்டாதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை எழுதினர்.  ஆங்கிலம், கணிதம், தமிழ் மற்றும் வரலாறு உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளில் தேர்வானது நடைபெற்றது. இதனையொட்டி, தேர்வு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 






varient
Night
Day