தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ் புத்தாண்டையொட்டி தமிழக மக்‍களுக்‍கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்‍ஸ் தள பக்‍கத்தில் வெளியிட்ட பதிவில், மகிழ்ச்சியான புத்தாண்டு தினத்தை ஒட்டி அன்பான வாழ்த்துக்‍கள் ​என குறிப்பிட்டுள்ளார். இந்தப்புத்தாண்டு வளத்தையும் நல்ல ஆரோக்‍கியத்தையும், ம​கிழ்ச்சியையும் கொண்டு வரட்டும் என்றும், அனைவரும் நல்ல ஆரோக்‍கியத்துடன் ஆசிர்வதிக்‍கப்படட்டும் எனவும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதே போன்று கேரள ​​விஷு, ஒடிசாவின் மகா சங்கராந்தி, அஸ்ஸாமின் பிகு ஆகிய பண்டிகைகளுக்‍கும் அந்தந்த மாநில மக்‍களுக்‍கு அவரவர் தாய்மொழியில் பிரதமர் ​மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Night
Day