தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

காற்றின் திசை மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், விருதுநகர், தென்காசி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று, கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நீலகிரி, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Night
Day