தருமபுரி: கழுதை பாலை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கும் பெற்றோர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தருமபுரியின் பல்வேறு பகுதிகளில் கழுதை பால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.  பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த 4 விவசாயிகள் 40க்கும் மேற்பட்ட கழுதைகளுடன் ஒவ்வொரு பகுதியாக சென்று கழுதை பாலை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் தர்மபுரி நகரப் பகுதியில் தாய் கழுதை மற்றும் குட்டிகளுடன் சென்று பொதுமக்கள் கேட்கும் இடத்திலேயே பாலை கறந்து விற்பனை செய்கின்றனர். சுமார் நான்கு மில்லி லிட்டர் அளவுள்ள பாலாடையை 50 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். குழந்தைகள் கழுதை பால் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து சளி, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வராது என்ற நம்பிக்கையில் கழுதை பாலை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கின்றனர். 

Night
Day