தர்பூசணியில் செயற்கை நிறமூட்டி கலப்பதாக கூறுவது வீண் வதந்தி - புலம்பும் விவசாயிகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் தர்பூசணி பழங்களில் செயற்கை நிறமூட்டி கலக்கப்படுவதாக அதிர்ச்சி கிளம்பிய நிலையில், அது குறித்து உண்மை நிலையை அறிவதற்காக தர்பூசணி சாகுபடி செய்யப்படும் இடத்திலிருந்தும், பழங்கள் விற்கப்படும் இடத்திலிருந்தும் எமது செய்தியாளர்கள் நேரலையில் இணைகின்றனர். அதனை தற்போது பார்க்கலாம்..

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆலந்தா கிராமத்தில் ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர். தமிழகத்தில் தர்பூசணி பழங்களில் செயற்கை நிறமூட்டி கலக்கப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், தர்பூசணியில் செயற்கை நிறமூட்டி கலப்பதாக கூறப்படுவது வீண் வதந்தி என அப்பகுதி விவசாயிகள் புலம்பித் தவிக்கின்றனர். மேலும், இந்த வதந்தி காரணமாக ஒரு கிலோ தர்பூசணி 5 ரூபாய்க்கு விலை போவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.


Night
Day