தலைமையேற்க வாருங்கள்.. சின்னம்மாவுக்கு கழகத்தினர் அழைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, 'கழகத்தை தலைமையேற்று வழிநடத்திட வாருங்கள்' என அழைப்பு விடுத்து, தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் சுவரொட்டிகள் ஒட்டி வருகின்றனர்.

அஇஅதிமுக பிளவுபட்டு உள்ளதால், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும் பின்னடைவை சந்திக்க நேரிட்டது. இதனால், அதிர்ச்சிக்குள்ளான தொண்டர்கள், கழகத்தை தொடர் தோல்விலியிருந்து காப்பாற்றவும், கழகத்தை வழிநடத்தவும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வரவேண்டுமென அழைப்பு விடுத்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், புரட்சிதலைவரின் புனித கட்சியை, ஆட்சியை புரட்சித்தாயே தங்களால் மட்டுமே வழிநடத்த முடியும் என வழக்கறிஞரும், கழக நிர்வாகியுமான கிறைஸ்ட் மில்லர் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதேபோல் நாகர்கோவில் முழுவதும் புரட்சித்தாய் சின்னம்மா அவர்களை கழகத்தை வழிநடத்திட வாருங்கள் என அழைப்பு விடுத்து கழக நிர்வாகிகள் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். 

நெல்லை மாவட்டத்திலும் பல்வேறு முக்கிய இடங்களில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கழகத்தை வழிநடத்திட வரவேண்டுமென சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. நெல்லை மாவட்டம் திம்மராஜபுரம் பகுதியில் கழக நிர்வாகி எம்எஸ் சிவபெருமாள் சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில் கழகத்தைக் காக்க வாருங்கள் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளன. கழகத்தை தொடர் தோல்வியில் இருந்து உயிர்ப்பிக்கவும் மீண்டும் கழகத்தை வழிநடத்தவும் தலைமையேற்க வாருங்கள் என்று தொண்டர்கள் அழைப்பு விடுத்து சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

இதேபோல், திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு முக்கிய இடங்களில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, கழகத்தை வழிநடத்திட வரவேண்டுமென சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கழகத்தை தலைமையேற்று நடத்திட வேண்டுமென முன்னாள் அரசு தலைமை கொறடா நரசிம்மன், முன்னாள் அமைச்சர் எம்.ஆனந்தன், ஆலப்பாக்கம் ஜீவானந்தம், பூவை கந்தன், எல்லாபுரம் ரஜினி, சேகர், மோகன் குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர். திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட புழல் ஒன்றிய கழக நிர்வாகி எஸ்.ஹச்.நாதன் சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில் ஒற்றுமையே ஒன்றரை கோடி தொண்டர்களின் எண்ணம் என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.


Night
Day