தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உத்தரவிடக் கோரி வழக்கு - மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, படித்துறைகளை பராமரிக்க கோரிய வழக்கில் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றில் சிதிலமடைந்த படித்துறைகளை சீரமைக்க உத்தரவிடக்கோரிய மனு நீதிபதிகள் சுவாமிநாதன் - புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வீடியோ கான்பரன்சில் ஆஜரான மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியிடம்,  தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? என நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, இதுகுறித்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, சிறிது காலஅவகாசம் தருவதாகவும் அதற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Night
Day