தமிழகம்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து..!...
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
தாம்பரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 4 கோடி ரூபாய் பணம் குறித்து தேர்தல் சிறப்பு குழு விசாரணை நடத்தி வருவதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து 4 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் நேற்று பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வருமான வரித்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். மேலும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டால், தேர்தல் சிறப்பு குழு விசாரணை மேற்கொள்ளும் என்றும், அந்த வகையில் 4 கோடி ரூபாய் குறித்து தேர்தல் சிறப்பு குழு விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, இதுகுறித்து தேர்தல் செலவினப் பார்வையாளர் விசாரித்து தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாகவும் சத்யபிரத சாகு கூறியள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...