தாயகம் திரும்பிய அஸ்வினுக்கு உற்சாக வரவேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், ஆஸ்திரேலியாவில் இருந்து தாயகம் திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் அவரது உறவினர்கள், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக நேற்று திடீரென அறிவித்தார். 38-வயதான அவர் பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான 3வது போட்டி முடிந்த பிறகு இந்த அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலிருந்து தாயகம் திரும்பிய அஸ்வினுக்கு, சென்னை விமான நிலையத்தில் அவரது உறவினர்கள், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

Night
Day