தாய் யானை சேர்த்து கொள்ள மறுத்த யானைக்குட்டி உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவையில் தாய் யானையை பிரிந்து சுற்றி திரிந்து வந்த குட்டியானை, தெப்பக்காடு முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்நலக் குறைவால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் 4 மாதமே ஆன குட்டியுடன் மயங்கிய நிலையில் கடந்த மாதம் 30ம் தேதி தாய் யானை ஒன்று மீட்கப்பட்டது. உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் உடல் நலம் தேறி மீண்டு வந்தது. அப்போது தனது அண்ணன் யானையுடன் குட்டி யானை சுற்றி திரிந்து வந்தது. குட்டியை கண்காணித்து வந்த வனத்துறையினர் அதனை மீட்டு தாயுடன் சேர்த்து வைக்க முயற்சித்தபோது, குட்டியை தாய் யானை சேர்த்து கொள்ளவில்லை.

குட்டியை தாயுடன் சேர்த்துவைக்கும் அனைத்து முயற்சியும் தோல்வி அடைந்ததால், கடந்த 9ம் தேதி மருதமலையில் இருந்து நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில்தான் தாயை பிரிந்த குட்டியானை உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டது. குட்டிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வனத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 19 நாட்களாக தெப்பக்காடு முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த குட்டியானை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day