தாழ்வு பகுதி வலுவடைவதில் தாமதம் - வானிலை ஆய்வு மையம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்துக்‍கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்‍கப்பட்ட நிலையில், வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக   வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, இரு தினங்களில் மேலும் வலுப்பெற்று, தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கும், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் கனமழையும் பெய்யும் என்றும், வரும் 19-ம் தேதி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.  

Night
Day