திசை மாறிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - சென்னை மக்கள் நிம்மதி

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் இன்று அதிகனமழைக்கான வாய்ப்பு குறைவு என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் 2 நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகனமழைக்கான "ரெட் அலர்ட்" எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது. இந்நிலையில், சென்னையில் இன்று அதிகனமழைக்கான வாய்ப்பு குறைவு என, தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு வடக்கே ஆந்திர பகுதியை நோக்கி சென்றதால் சென்னையில் மிதமான மழை மட்டுமே பெய்யும் என்றும், அதிகனமழைக்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனிடையே சென்னை உட்பட 4 மாவட்டங்களில் நள்ளிரவு எதிர்பார்த்த அதி கனமழை பெய்யாததால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Night
Day