திண்டிவனத்தில் திமுக அரசைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 2 ஆயிரம் ரூபாய் வெள்ள நிவாரணம் வழங்காத திமுக அரசைக் கண்டித்து 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகளும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும் பாதிக்கப்பட்டன. இதனால் வெள்ளம் பாதித்த குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படுமென திமுக அரசு அறிவித்தது. ஆனால் திமுகவினர் தங்களுக்கு வேண்டியவர்களுக்கே நிவாரணம் வழங்குவதாகவும், உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த இறையானூர், வராகப்பட்டு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், திண்டிவனத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏராளமான வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையிலேயே நின்றதால், திண்டிவனம் -புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்ற போலீசாரிடமும், வருவாய்த்துறை அதிகாரிகளிடமும் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Night
Day