திண்டிவனம் அரசு பொது மருத்துவமனை - கண் மருத்துவர் இல்லாததால் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் கண் மருத்துவர் இல்லாததால் நோயாளிகள் பல மணி நேரம் மருத்துவமனை வளாகத்தில் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. திண்டிவனத்தில் அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டாரப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே இம்மருத்துவமனையில் கண் சிகிச்சைக்காக தனி பிரிவு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கண் சிகிச்சைக்காக பல்வேறு பகுதியிலிருந்து நோயாளிகள் காலையிலேயே வந்துள்ளனர். ஆனால் தற்போது வரை கண் மருத்துவர் இல்லாததால் நோயாளிகள் பல மணி நேரமாக மருத்துவமனை வளாகத்தில் காத்திருக்கின்றனர். மேலும் இந்த மருத்துவமனையில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லையென பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Night
Day