திண்டுக்கல்: அவரைக்கு உரிய நிலை நிர்ணயம் செய்ய கோரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அவரைக் காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்யுமாறு ஒட்டன்சத்திரம் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பாச்சலூர் கிராமத்தில் 400 ஏக்கரில், பந்தல் அமைத்து அவரை சாகுபடி செய்துள்ளனர். மூன்று மாதகால பயிரான அவரையை அறுவடை செய்வதற்குள் ஆள் கூலி, உரம், மருந்து, வண்டி வாடகை, மார்க்கெட் நுழைவுக் கட்டணம், கமிஷன் என ஏக்கர் ஒன்றுக்கு 3 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது என கூறும் விவசாயிகள், கமிஷன் கடை உரிமையாளர்கள் ஒன்றிணைந்து, அவரைக்காய் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அளிப்பதாக குற்றம்சாட்டி உள்ளனர். 45 ரூபாய் வரை விற்பனையானால் மட்டுமே லாபகரமானதாக இருக்கும் என்றும் தெரிவித்த விவசாயிகள், உரிய விலை நிர்ணயம் செய்யுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day