திண்டுக்கல்: குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் குறிஞ்சி நகர் செல்லும் சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். குறிஞ்சி நகர் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலையானது, மழை உள்ளிட்ட காரணங்களால் மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதி வழியே செல்லும் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே  சாலையை உடனடியாக சீரமைத்து தரவேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day