தருமபுரியில் திமுகவினரின் அராஜக செயல்களால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைந்தனர்.
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த தடகம் சுப்பிரமணி விடுவிக்கப்பட்டு புதிய மாவட்ட செயலாளராக தர்மசெல்வனை திமுக நியமித்துள்ளது. இதனையடுத்து புதிய மாவட்ட செயலாளர் தர்மசெல்வன் தருமபுரியில் உள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, அம்பேத்கர் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்தார். அப்போது அவரது ஆதரவாளர்கள் நான்கு ரோடு சந்திப்பில் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடித்ததில் காகிதங்கள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.